உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கிரஷர் காவலாளி இறப்பு

கிரஷர் காவலாளி இறப்பு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே முத்தனம்பட்டியை சேர்ந்தவர் பால்ராஜ் 65, கரட்டுப்பட்டி அருகே உள்ள கிரஷரில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இரு நாட்களுக்கு முன் வேலைக்குச் சென்றவர் திரும்ப வரவில்லை.மனைவி முத்து பின்னாயி கிரஷரில் வேலை செய்யும் புவனேஷ் குமாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். சிறிது நேரத்திற்கு பின் கிரசரில் பால்ராஜ் சுயநினைவின்றி கிடப்பதாக புவனேஷ்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.உறவினர்கள் சென்று பார்வையிட்ட பின் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மனைவி முத்து பின்னாயி புகாரில் க.விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ