உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அணைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு

அணைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு

ஆண்டிபட்டி: அணைகள் பாதுகாப்பு குறித்து சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி வைகை அணை நீர்வளத்துறை அலுவலக வளாகத்தில் நடந்தது. தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் மற்றும் மாநில அணை பாதுகாப்பு ஆணையம் சார்பில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தலைமை பொறியாளர்கள் ரமேஷ், ஜானகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அணைகள் பாதுகாப்பு, மழை, வெள்ளம் மற்றும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் அணைகளின் பாதுகாப்பு நெறிமுறைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் வனங்கள் பாதுகாப்பு, மரங்களின் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி மாணவ மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ.,க்கள் மகாராஜன், சரவண குமார், நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் சாம்இர்வின், நீர்வளத்துறை திட்ட மேலாண்மை அலகு கண்காணிப்பு பொறியாளர் வீரலட்சுமி, தேசிய அணை பாதுகாப்பு ஆணைய இயக்குனர் சமீர் குமார் சுக்லா, விவசாயிகள், சங்கப் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ