உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விழும் நிலையில் ஆபத்தான மின்கம்பம்

விழும் நிலையில் ஆபத்தான மின்கம்பம்

கூடலுார்: கூடலுார் தாமரைக்குளம் அரசு விதைப்பண்ணை அருகே உள்ள மின் கம்பம் பல மாதங்களாக சாய்ந்த நிலையில் உள்ளது. நெல் வயல்கள் அதிகம் உள்ள இப்பகுதியில் தொழிலாளர்கள் அதிகமாக விவசாய பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப் பகுதிக்கு அருகே சாய்ந்து விழுந்த நிலையில் இருந்த இரண்டு மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளது. விதைப் பண்ணைக்கு முன் பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை முன்கூட்டியே மாற்றி அமைக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். விபத்து ஏற்படுவதற்கு முன் மின்வாரியத்தினர் சீரமைக்க வேண்டியது அவசியமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !