உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மது போதையில் இறப்பு

மது போதையில் இறப்பு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி குமாரபுரத்தைச் சேர்ந்தவர் கவாஸ்கர் 45, பெயிண்டர் வேலை செய்து வந்த இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார். இதனால் உடல் நல குறைபாடு ஏற்பட்டு அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.மது குடிக்க வேண்டாம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியும் தொடர்ந்து குடித்துள்ளார். இரு நாட்களுக்கு முன் புள்ளிமான்கோம்பை ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு போதையில் இருந்தவர் வலிப்பு ஏற்பட்டு இறந்தார்.கணவரின் நிலைமை குறித்து மனைவி லதா புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ