உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசு அலுவலகங்களுக்கு குப்பை தொட்டி வழங்க முடிவு

அரசு அலுவலகங்களுக்கு குப்பை தொட்டி வழங்க முடிவு

தேனி : தேனி நகராட்சி சார்பில் அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு மக்கும், மக்காத குப்பை பிரித்து வழங்க நீலம், பச்சை நிற குப்பை தொட்டிகள் வழங்கப்பட உள்ளது.தேனி நகராட்சி பகுதி வீடுகளில் மக்கும், மக்காத குப்பை பிரித்து சேகரிக்கப்பட்டு வருகிறது. இன்னும் போதிய விழிப்புணர்வு ஏற்பட வில்லை. இதனால் மக்கள் அதிகம் வந்து செல்லும் இடம், பள்ளிகளில் மக்கும், மக்காத குப்பையை பிரித்து வழங்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு அலுவலங்களில் நீலம், பச்சைநிற பிளாஸ்டிக் குப்பை தொட்டிகள் வழங்கப்பட உள்ளது.சுகாதாரபிரிவினர் கூறுகையில், தெருக்களில் குப்பையை வீச வேண்டாம் என மக்களை அறிவுறுத்தி வருகிறோம். இதனால் எங்கும் குப்பை தொட்டி வைக்கவில்லை. வீடுகளுக்கு வரும் பணியாளர்களிடம் குப்பை பிரித்து வழங்க அறிவுறுத்தி வருகிறோம். விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகராட்சி பகுதி உள்ள அரசு அலுவலகங்கில் குப்பை தொட்டிக்கள் வைக்கப்பட உள்ளது. மொத்தம் 40 இடங்களில் வைக்க திட்டமிட்டுள்ளோம். இதுவரை 10 'செட்' குப்பை தொட்டிகள் வந்துள்ளன. என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ