உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

தேனி, ஆக.3– தேனி பங்களாமேட்டில் பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தேசிய துணை தலைவர் கதிரவன் தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேகமலையில் 98 கிராம மக்களை வெளியேற்றுவதை நிறுத்த வேண்டும், வன உரிமை சட்டத்தின் கீழ் பட்டா வழங்க வேண்டும், தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் மக்களுக்கு ஆதரவாக இருக்க வலியுறுத்தினர். பின்னர் கலெக்டர் அலுவலகம் சென்று டி.ஆர்.ஓ., ராஜகுமாரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ