உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மான் வேட்டை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறல்

மான் வேட்டை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறல்

கூடலுார்: கூடலுார் அருகே நடந்த மான்வேட்டை சம்பவத்தில் ஒரு வாரமாகியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். கூடலுார் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரம் 18ம் கால்வாயின் நீர்வரத்துப் பகுதியான தொட்டிப் பாலம் அருகில் ஜன.27ல் வேட்டையாடப்பட்ட மானின் உடல் பாகங்கள் கிடந்தது. இதனைக் கைப்பற்றிய கம்பம் மேற்கு வனத்துறையினர், அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நிறுத்தப்பட்டிருந்த டூவீலரையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கூடலுாரைச் சேர்ந்த 5 பேரை அழைத்துச் சென்று கம்பம் வனத்துறை அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். ஒரு வாரமாகியும் இதுவரை வேட்டையாடியவர்களை கண்டுபிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !