உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஸ்ட்ராபெரி செடிகளில் நோய் தாக்குதல்

ஸ்ட்ராபெரி செடிகளில் நோய் தாக்குதல்

மூணாறு: வட்டவடை ஊராட்சியில் 'ஸ்ட்ராபெரி' செடிகள் கருகி விளைச்சலும், விலையும் குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.மூணாறு அருகில் உள்ள வட்டவடை ஊராட்சியில் காய்கறி சாகுபடி முக்கிய தொழிலாகும். அங்கு கால நிலைக்கு ஏற்ப உருளை கிழங்கு, காரட், பீட்ரூட், முட்டை கோஸ், காலிபிளவர், பட்டாணி, பீன்ஸ் மற்றும் கீரை வகைகள், பூண்டு உள்பட பல்வேறு காய்கறி சாகுபடி நடக்கிறது.இதனிடையே சமீப காலமாக 'ஸ்ட்ராபெரி' பழம் சாகுபடியில் விவசாயிகள் இறங்கினர். குறைந்த கால அளவில் அதிக வருமானம் கிடைப்பதால் ஏராளமான விவசாயிகள் ஸ்ட்ராபெரி பழம் சாகுபடி செய்துள்ளனர். குறிப்பாக வட்டவடை, கோவிலூர், பழத்தோட்டம், சிலந்தி யாறு ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் ஸ்ட்ராபெரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது ஸ்ட்ராபெரி பழம் சீசன் என்றபோதும், ஒருவித மர்ம நோயால் செடிகள் கருகி வருகின்றன. அதனால் விளைச்சல் குறைந்த நிலையில், தரமான பழம் கிடைப்பதில்லை என்பதால் விலையும் குறைந்தது. கடந்த மாதம் கிலோ ஒன்று ரூ.600க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.300க்கு விற்கப்படுகிறது.புனேயில் இருந்து விண்டர்டான், ஸ்சுவீட்சார்லி, கேமரோஸ் ஆகிய அதிக விளைச்சல் தரும் இனங்கள் கொண்டு வரப்பட்டு சாகுபடி செய்யப்பட்ட நிலையில் விளைச்சல், விலை ஆகியவை குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை