வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அப்படி போடு இனிமேல் ஒரு பய வாயை திறக்க மாட்டான்.
தேனி: மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை தெரு நாய்களுக்கான நிரந்தர காப்பகங்கள் தொடங்குவதற்காக தன்னார்வ நிறுவனங்கள், என்.ஜி.ஓ.,க்கள் அறக்கட்டளை நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுத்துள்ளது. மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் தெரு நாய்களின் பெருக்கம் அதிகரித்தன. இவை தெருக்களல் செல்லும் பொதுமக்கள், குழந்தைகளை கடித்து விரட்டுவதால் தெரு நாய்களுக்கு அச்சப்படும் நிலை அதிகரித்தது. இப்பிரச்னை குறித்து நாய்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கிடம் புகார் மனு அளித்தனர். அதன்பின் கலெக்டர், கால்நடை பராமரிப்புத்துறை முயற்சியில் முதற்கட்டமாக 6 நகராட்சிகள், சில பேரூராட்சிகளில் கால்நடை பராமரிப்புத்துறை நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கத்தை குறைத்தனர். நிதி பற்றாக்குறையால் அப்பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தெருநாய்களை பாதுகாக்கவும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதை குறைக்க தமிழகம் முழுவதும் 72 தெருநாய் காப்பகங்கள் துவங்கப்பட உள்ளன. இதற்காக அரசு ரூ.40 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதனால் தன்னார்வ நிறுவனங்கள், என்.ஜி.ஓ.,க்கள், அறக்கட்டளை நிர்வாகிகள் காப்பகம் அமைக்க முன் வந்தால் அவர்களுக்கு விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டு கால்நடை பராமரிப்புத்துறை மூலம் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்பட உள்ளது.இதுகுறித்து இணை இயக்குனர் டாக்டர் சி.இளங்கோ கூறியதாவது: காப்பகம் அமைக்க அரை ஏக்கர் நிலம் வைத்திருப்பது அவசியம். பொது மக்களுக்கு இடையூறு இல்லாத இடத்தில் அமைக்க வேண்டும். நாய்கள் வெளியில் சென்றுவிடாதவாறு சுற்றுச்சுவர், அறுவை சிகிச்சை அரங்கு, பாதுகாப்பு அறை, பராமரிப்பாளர்கள், கால்நடை டாக்டர் நியமனம் போன்ற வசதிகள் இருக்க வேண்டும். இவ்வாறு காப்பகம் அமைக்க விரும்புவோருக்கு உதவி தொகை ரூ.50 லட்சம் வழங்கப்படும். மூன்று முதல் 5 ஆண்டுகள் காப்பகத்தை பராமரிப்பது அவசியம். இந்நிதி வழங்கப்படும் .முன் தேசிய விலங்குகள் நல வாரியத்தின் தென் மண்டல அதிகாரிகள் இருவர் நேரடியாக மையத்தை ஆய்வு செய்து ஒப்புதல் வழங்குவார்கள். மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர், அப்பகுதி கால்நடை டாக்டர், மாவட்ட விலங்குகள் பாதுகாப்பு குழு உறுப்பினர் ஆகியோரின் ஒப்புதலில் நிதி வழங்கப்படும். விதிமுறைகள் படி காப்பகம் அமைக்க விரும்புவோர் 94431 41670 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
அப்படி போடு இனிமேல் ஒரு பய வாயை திறக்க மாட்டான்.