உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாவட்ட பேரவை கூட்டம்

மாவட்ட பேரவை கூட்டம்

ஆண்டிபட்டி: பொதுப்பணித்துறை ஊழியர் சங்கம் மாவட்ட பேரவை கூட்டம், மாவட்ட கிளை நிர்வாகிகள் தேர்வு வைகை அணை விடுதியில் நடந்தது. அவைத்தலைவர் நல்லதம்பி, மாநில பொதுச் செயலாளர் சச்சிதானந்தம், துணை பொதுச்செயலாளர் சீனிஅய்யா, முன்னாள் துணை பொதுச்செயலாளர் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். புதிய நிர்வாகிகளில் தேனி மாவட்ட செயலாளராக முத்துப்பாண்டி, அவைத்தலைவராக முத்துப்பாண்டி, பொருளாளராக உலகநாதன், இணை செயலாளர் பாலமுருகன், ராமன், பொதுக்குழு உறுப்பினர்களாக கணேசன், முத்துப்பாண்டியன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். ஊழியர் சங்க கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை