மேலும் செய்திகள்
குழாய் உடைப்பு சீரமைப்பு தினமலர் செய்தி எதிரொலி
26-Sep-2024
பெரியகுளம்: மாவட்ட அளவிலான அட்யா பட்யா விளையாட்டு போட்டியில் தங்கள் அணியின் வெற்றிக்கு வலுசேர்க்க வீரர்கள், வீராங்கனைகள் ஆர்வமாக விளையாடினர். இப்போட்டி கபடி, கோகோ போட்டிகளினின் கலவையாகும். எதிரெதிர் அணிகளில் தலா 9 பேர் பங்கேற்பர்.பெரியகுளம் அருகே வடுகபட்டியில் தேனி மாவட்ட அளவிலான அட்யா பட்யா விளையாட்டு போட்டி ஊரக விளையாட்டு மைதானத்தில் துவங்கியது. இளைஞர் விளையாட்டு கழக தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமை வகித்து போட்டிகளை துவக்கி வைத்தார். வடுகபட்டி பேரூராட்சித் தலைவர் நடேசன், அட்யா பட்யா மாவட்டத் தலைவர் செல்வக்குமார பாண்டியன், செயலாளர் முத்துக்குமரன், தோட்டக்கலைக் கல்லூரி விளையாட்டுத் துறை இயக்குனர் பார்த்திபன் முன்னிலை வகித்தனர். பெரியகுளம், வடுகபட்டி, மேல்மங்கலம், சில்வார்பட்டி, ஆண்டிபட்டி, சித்தார்பட்டி, சுந்தரராஜபுரம், ராஜாதானி, ரோசனம்பட்டி, கரிசல்பட்டி, கொண்டமநாயக்கன்பட்டி உட்பட மாவட்டத்தில் 15 அணிகள் பங்கேற்றன.17 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள், மாணவிகள் 81 பேர் ஆர்வமாக விளையாடினர். தங்கள் அணி வெற்றி பெற நுணுக்கமாக விளையாடினர். போட்டிகளில் வெற்றி பெறும் அணி, சிறப்பாக விளையாடும் அணி என இரு அணிகள் தேர்வு செய்யப்படும். இவர்கள் அக்.18ல் திருநெல்வேலியில் மாநில அளவில் நடக்கும் அட்யா பட்யா போட்டியில் பங்கேற்க உள்ளனர். ஏற்பாடுகளை தேனி மாவட்ட அட்யா பட்யா கூட்டமைப்பின் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.-
26-Sep-2024