உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கலைத்திருவிழா மாவட்ட போட்டிகள் துவக்கம்

கலைத்திருவிழா மாவட்ட போட்டிகள் துவக்கம்

தேனி, ஆக. 22–வீரபாண்டி சவுராஸ்டிரா கலை கல்லுாரியில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடந்தது. போட்டிகளை சி.இ.ஓ., முருகன் துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் பிரபு முன்னிலை வகித்தார். மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் 317 பேர் போட்டிகளில் பங்கேற்றனர். குழுநடனம், தனிநபர் நடனம், நாடகம், ஓவியம் வரைதல், ரங்கோலி வரைதல், காய்கறிகள் பழங்களை பயன்படுத்தி சிற்பங்கள் செதுக்குதல், களிமண் சிற்பங்கள் செதுக்குதல், இசைக்கருவி மீட்டல், பேச்சு, பரதநாட்டியம் உள்ளிட்ட 32 வகையான போட்டிகள் நடந்தது. ஒருங்கிணைத்த பள்ளிகல்வி உதவி திட்ட அலுவலர் மோகன் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கரியன் போட்டிகளை ஒருங்கிணைத்தனர். உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தனியாக நடக்கிறது. முதல் கட்டமாக ஆக., 25க்குள் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் 9 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்