உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தீபாவளி: கோயில்களில் சிறப்பு வழிபாடு

தீபாவளி: கோயில்களில் சிறப்பு வழிபாடு

தேனி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பொது மக்கள் குடும்பத்தினருடன் சென்று, சுவாமி தரிசனம் செய்தனர். தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், தேனி பெத்தாட்சி விநாயகர் கோயில், மதுரை ரோடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், என்.ஆர்.டி., நகர் சிவ கணேச கந்த பெருமாள் கோயில், அல்லிநகரம் வீரப்ப அய்யனார் மலைக் கோயில்களில் மூலவர், உற்ஸவமூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தன. பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து சென்றனர். பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கவுமாரியம்மன் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில், ஷீரடி சாய்பாபா கோயில், கம்பம் ரோடு காளியம்மன் கோயில், வரசித்தி விநாயகர் கோயில், பாம்பாற்று ராம பக்த ஆஞ்சநேயர் கோயில், ஜெயம் விநாயகர் கோயில், கைலாசபட்டி கைலாசநாதர் கோயில், லட்சுமிபுரம் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் உட்பட தாலுகா முழுவதும் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் பெற்றுச் சென்றனர். போடி போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தங்க கவச அலங்காரத்தில் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் தரிசனம் பெற்றனர். சுவாமி அலங்காரத்தினை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார். பிச்சாங்கரை மலைப் பகுதியில் அமைந்துள்ள கைலாய கீழச் சொக்கநாதர் கோயில், மேலச் சொக்க நாதர் கோயில், போடி பரமசிவன் கோயில், கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயில், திருமலாபுரம் முத்து மாரியம்மன் கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விசவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. போடி சுப்ரமணியர் சுவாமி கோயிலில் முருகனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை