உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தி.மு.க., பொதுக்கூட்டம்..

தி.மு.க., பொதுக்கூட்டம்..

ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி அருகே டி. அழகாபுரியில் தி.மு.க., அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. தி.மு.க., ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் தலைமை வகித்தார். டி.அழகாபுரி கிளைச் செயலாளர் சிவக்குமார் வரவேற்றார். முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் சகாதேவன், ஒன்றிய துணைச் செயலாளர் சின்னசாமி, மாவட்ட பிரதிநிதி செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் எம்.எல்.ஏ., மகாராஜன், கட்சி பேச்சாளர் முருகவேல் உட்பட பலர் பேசினர். நகர் செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை