உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  குடிநீர் கட்டண நோட்டீஸ் வீடு வீடாக விநியோகம்

 குடிநீர் கட்டண நோட்டீஸ் வீடு வீடாக விநியோகம்

ஆண்டிபட்டி: குடிநீர் வரி மற்றும் டெபாசிட் உடனடியாக செலுத்த வலியுறுத்தி டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் வீடு வீடாக டிமாண்ட் நோட்டீஸ் வழங்கி ஒப்புதல் கையெழுத்து பெறுகின்றனர். இந்த ஊராட்சியில் 20க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதியை ஒட்டி ஊராட்சிக்குட்பட்ட ஜெ.ஜெ. நகர், சத்யா நகர், சீதாராம்தாஸ் நகர் ஆகிய விரிவாக்க பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி, குடிநீர் வரி, டெபாசிட் தொகை ஆகியவற்றை செலுத்த பலமுறை வலியுறுத்தியும் பொதுமக்கள் வரி செலுத்தாமல் இழுத்தடிப்பு செய்கின்றனர். வரி செலுத்தாத வீடுகள், கடைகளுக்கு டிமாண்ட் நோட்டீஸ் தயார் செய்து ஊராட்சி நிர்வாகத்தினர் வீடு வீடாக விநியோகம் செய்கின்றனர். வரி வசூலில் ஊராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ