உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தி.மு.க., மாநாட்டிற்கு சென்ற முதியவர் மாயம்

தி.மு.க., மாநாட்டிற்கு சென்ற முதியவர் மாயம்

--பெரியகுளம்: பெரியகுளம் அருகே வடுகபட்டி காளியம்மன் கோயில் தெரு அம்மாவாசி 67. செப்.17ல் கரூரில் நடந்த தி.மு.க., முப்பெரும் விழா மாநாட்டிற்கு, தி.மு.க.,நிர்வாகிகள் பஸ் ஸ்டாப்பில் உட்கார்ந்திருந்த அம்மாவாசியிடம் ரூ.200 தருகிறேன் என அழைத்துச்சென்றார். மாநாடு முடிந்து அம்மாவாசி வரவில்லை. இது குறித்து அம்மாவாசி மகன் பாலமுருகன் கூறுகையில், 'எனது தந்தை மூன்று ஆண்டுகளாக ஞாபக மறதியால் அவதிப்பட்டார். அவரை மாநாட்டிற்கு தி.மு.க.,நிர்வாகிகள் அழைத்துச் சென்றனர். மாநாடு முடிந்து ஊர் திரும்பவில்லை. இது குறித்து நிர்வாகிகளிடம் கேட்டபோது சரியான பதில் இல்லை. செப்.17ல் கரூர் சென்று தேடினோம் கண்டுபிடிக்க முடியவில்லை. கரூர் தான்தோன்றி போலீஸ் ஸ்டேஷனில் தந்தையை காணவில்லை என புகார் கொடுத்துள்ளேன்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை