உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  கம்பத்தில் ஓடை ஆக்கிரமிப்பு

 கம்பத்தில் ஓடை ஆக்கிரமிப்பு

கம்பம்: கம்பம் அருகே ஆக்கிரமிப்பில் சிக்கிய கோசேந்திர ஒடையை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கம்பம் அருகே உள்ள கோசேந்திர ஒடை 2 கி.மீ. தூரத்திற்கு இரண்டு கரைகளும் ஆக்கிரமித்து தென்னை மரங்கள், உலகு மரங்கள் வளர்த்து வருகின்றனர். புதுப்பட்டிக்கு மேற்கே உள்ள இடையகுளத்தில் மழை காலங்களில், தண்ணீர் நிரம்பி வழியும் போது, இந்த ஒடை வழியாக வெள்ள உபரி நீர் வெளியேறி, கம்பம் சின்ன வாய்க்காலில் கலப்பது வழக்கம்.ஆனால் தற்போது 2 கி.மீ.. உள்ள ஒடை முழுவதுமே ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளது. மழை காலங்களில் தண்ணீர் செல்ல வழியில்லாமல் உடைப்பு ஏற்பட்டு சேதம் ஏற்படுத்துவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்கிரமிப்பை அகற்ற நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை