உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அணையில் தண்ணீர் திறந்தும் வாய்க்காலுக்கு சப்ளை இல்லை கம்பம் விவசாயிகள் புலம்பல்

அணையில் தண்ணீர் திறந்தும் வாய்க்காலுக்கு சப்ளை இல்லை கம்பம் விவசாயிகள் புலம்பல்

கம்பம்: முதல் போக நெல் சாகுபடிக்கு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்த போதும், மடைகள் பராமரிப்பை காரணம் காட்டி சின்ன வாய்க்காவில் தண்ணீர் திறந்து விட மறுப்பதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடி நடைபெறுகிறது.முல்லைப் பெரியாறு பாசனத்தில் நடைபெறும் இந்த இரு போக சாகுபடியில் முதல் போக சாகுபடிக்கு ஜுன் முதல் தேதி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.தண்ணீர் திறந்து நான்கு நாட்கள் ஆகியும் கம்பம் சின்ன வாய்க்காலுக்கு தண்ணீர் தரவில்லை.காரணம் இந்த வாய்க்காலில் உள்ள 4 மடைகளை கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பு என கூறி இழுத்தடித்து வருகின்றனர். ஒவ்வொரு முறையும் விவசாயிகள் போராடி தண்ணீர் பெற்று விவசாயம் செய்கின்றனர். தற்போதும் தண்ணீர் திறந்தவுடன், மடைகளை பராமரிப்பு செய்ய போகிறோம். சில நாட்கள் கழித்து தண்ணீர் தருகிறோம் என நீர்வள துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.கடந்த சில மாதங்களாக வாய்க்கால் தண்ணீரின்றி காய்ந்து கிடந்த போதெல்லாம் விட்டு விட்டு, இப்போது விவசாய பணிகளை துவங்கும் போது அதிகாரிகள் இடையூறு செய்வதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.இதே போல் உத்தமுத்து வாய்க்காவில் ரூ.11 கோடி செலவில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் அங்கும் சிக்கல் எழுந்துள்ளதாக தெரிகிறது. சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு நாற்றங்கால் அமைக்கும் பணிகள் கால தாமதமாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ