செயற்குழு கூட்டம்
தேனி: தேனியில் தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மதுரை மண்டல அமைப்புச்செயலாளர் நாராயணசாமி தலைமை வகித்தார். மாநில தலைவர் பிரபு ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெக்கு மத்திய அரசு வரி உயர்த்தியதற்கு நன்றி தெரிவித்தும், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வேண்டும் உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.