உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / செங்கரும்பு கொள்முதல் அறிவிப்பை ஆர்வமுடன் விவசாயிகள் எதிர்பார்ப்பு

செங்கரும்பு கொள்முதல் அறிவிப்பை ஆர்வமுடன் விவசாயிகள் எதிர்பார்ப்பு

சின்னமனூர்: அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் செங்கரும்பு வழங்குவதற்காக விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் அறிவிப்பை அரசு விரைவில் வெளியிட வேண்டும் என செங்கரும்பு விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு சார்பில் ரேஷன்கடைகள் மூலம் ரூ.ஆயிரம் ரொக்கம், சர்க்கரை ஒரு கிலோ, முழு செங்கரும்பு வழங்கப்பட்டது. அந்தந்த மாவட்டங்களில் கலெக்டர்கள் கரும்பு கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.தேனி மாவட்டத்தில் சின்னமனூர் வட்டாரத்தில் 56.17 ஏக்கர், பெரியகுளம் வட்டாரத்தில் 43.95 ஏக்கர், தேனி வட்டாரத்தில் 5-.90 ஏக்கர் மொத்தம் தேனி மாவட்டத்தில் 106 ஏக்கரில் கரும்பு சாகுபடி கடந்தாண்டு செய்யப்பட்டிருந்தது. உத்தமபாளையம், கம்பம், சின்னமனூர், போடி வட்டாரங்களுக்கு சின்னமனூரில் கொள்முதல் செய்யப்பட்டது. வேளாண் துறையினர் தரம் குறித்து ஆய்வு செய்து கொள்முதல் செய்தனர். கொள்முதலில் கரும்பு 6 அடி நீளம், நோய் தாக்காததாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.ஒரு கரும்பு வெட்டுக் கூலி, கட்டும் கூலி, ஏற்றி, இறக்கு கூலி, போக்குவரத்து செலவு உள்பட ஒரு கரும்பு ரூ.33 ல் விலை நிர்ணயித்து வேளாண் விற்பனை குழுவினர் கொள்முதல் செய்தனர். கடந்தாண்டு 4.27 லட்சம் கரும்புகள் கொள்முதல் செய்து விநியோகம் செய்யப்பட்டது.இந்தாண்டு பொங்கலுக்கு இன்னமும் ஒரு மாதமே உள்ளது. இதுவரை எந்த அறிவிப்பும் அரசிடமிருந்து வரவில்லை. எனவே அரசு செங்கரும்பு கொள்முதல் குறித்து அறிவிப்பு எப்போது வெளியிடும் என எதிர்பாப்பில் சின்னமனூர் கரும்பு விவசாயிகள் உள்ளனர்.இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், வட மாவட்டங்கள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அரசின் முழு கவனமும் அந்த மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பும் வகையில் பணியில் ஈடுபட்டுள்ளது. எனவே கரும்பு கொள்முதல் குறித்து எப்போது வரும் என தெரியவில்லை, என்றனர். இதற்கிடையே தனியார் வியாபாரிகளும் கரும்பு கொள்முதலில் ஆர்வம் காட்டுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ