மேலும் செய்திகள்
ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட ஏற்பாடு
24-Dec-2024
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பகுதியில் அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், பள்ளி கல்லூரிகளில் தீ தடுப்புக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தீயணைப்புத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.ஆண்டிபட்டி பகுதியில் அரசு,தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்களில் தீ விபத்து அசம்பாவிதம் ஏற்பட்டால் அப்பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள முன் எச்சரிக்கை குறித்து தீயணைப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.ஆண்டிபட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமரன் கூறியதாவது: அரசு,தனியார் கட்டங்களில் தீயணைப்பு கருவிகள், தீ தடுப்பு வாளிகள் உரிய இடத்தில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அவசர தேவைக்கு தேவையான நீர் இருப்பு வேண்டும். அலுவலக சுவர்களில் பாதுகாப்பான வயரிங் குறித்தும், மின்கசிவுக்கான வாய்ப்புகள் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்து கட்டடம் மற்றும் அலுவலக ஆவணங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. அரசு விதிகளின்படி பாதுகாப்பு மேற்கொள்ளாத இடங்களில் தீ தடுப்புக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த அறிவுறுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. நெருக்கடியான இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தீயணைப்புத்துறை மூலம் தொடர்ஆலோசனையும் வழங்கப்படுகிறது என்றார்.
24-Dec-2024