உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கம்

முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கம்

ஆண்டிபட்டி, செப். 8- ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்க விழா மற்றும் நன்னெறிப்படுத்துதல் விழா கல்லூரி நிர்வாக தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர்கள் பிரசன்ன வெங்கடேசன், ரேணுகா, சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் அருள்குமார் வரவேற்றார். முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளின் பெற்றோர்கள், விவசாயிகள், முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களின் பெற்றோர்களை குத்து விளக்கு ஏற்ற வைத்து கவுரவித்தனர். தன்னம்பிக்கை பேச்சாளர் ஜெகன் பங்கேற்று நன்னெறி, அறம் சார்ந்த வாழ்வு, புதிய தொழில்நுட்பத்தின் தேவைகள் குறித்து மாணவர்களிடம் பேசினார். விழா ஏற்பாடுகளை கல்லூரி மேலாளர் நாகேந்திரன், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர். ஆங்கிலத்துறை தலைவர் முனைவர் பிரமிளா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை