மேலும் செய்திகள்
யானை தாக்கியதில் இளைஞர் கை எலும்பு முறிந்தது
01-May-2025
மூணாறு: மாட்டுபட்டி எஸ்டேட் ஆர் அண்ட் டீ பகுதியில் இரண்டு குட்டிகளுடன் புலி நடமாடிய இடத்தில் வனத்துறையினர் ஆய்வு நடத்தினர்.மூணாறு அருகே மாட்டுபட்டி எஸ்டேட் ஆர் அண்ட் டீ பகுதியில் இரண்டு குட்டிகளுடன் புலி நடமாடியதை சில தொழிலாளர்கள் நேரில் பார்த்தனர்.மூணாறு வனத்துறை அதிகாரி பீஜூசோமன் தலைமையில் வனக்காவலர்கள் புலிகள் நடமாடிய பகுதியில் ஆய்வு நடத்தினர். அங்கு புலிகளின் தடம் பல இடங்களில் பதிந்து இருந்ததால், அதன் நடமாட்டத்தை உறுதி செய்தனர்.அப்பகுதியில் புலி, சிறுத்தை ஆகியவை அடிக்கடி நடமாடி வருவதால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர்.வனத்துறை அதிகாரி பிஜூசோமன் கூறுகையில், 'மூன்று விதமான தடங்கள் கண்டறியப்பட்டதால் மூன்று புலிகள் நடமாடியது உறுதியானது. அப்பகுதியில் மூன்று நாட்களுக்கு காலை, இரவில் வனத்துறை அதிரடி படையினர் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.தொழிலாளர்கள் தேவையின்றி இரவில் வெளியில் நடமாடகூடாது. காலை வேளையில் வெகு சீக்கிரம் பணிக்கு செல்வதை தொழிலாளர்கள் தவிர்க்க வேண்டும். அப்பகுதியைச் சேர்ந்த வட மாநில தொழிலாளர்கள் சிலர் மாட்டுபட்டி அணை நீர்தேக்கத்தில் அதிகாலை மீன் பிடிக்கச் செல்வது வழக்கம். அதனை தோட்ட நிர்வாகம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
01-May-2025