உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  பெரியம்மை நோய் இலவச தடுப்பூசி செலுத்தும் பணி நாளை துவக்கம்; கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தகவல்

 பெரியம்மை நோய் இலவச தடுப்பூசி செலுத்தும் பணி நாளை துவக்கம்; கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தகவல்

தேனி : ‛‛மாவட்டத்தில் நாளை முதல் செப்.30 வரை பசு, எருமை மாடுகளை தாக்கும் பெரியம்மை நோயை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், இலம்பி தோல் நோய் தடுப்பூசி வழங்கும் முகாம் நடக்க உள்ளது.'' என, மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார். மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சாரபில், இணை இயக்குனர் கோயில்ராஜா மேற்பார்வையில் பெரியம்மை நோய் தாக்குதலை தவிர்க்க, இலம்பி தோல் நோய் இலவச தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாளை முதல் துவங்க உள்ளன. இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது: கொசு, ஈ, உண்ணி கடி மூலமாகவும், பாதிக்கப்பட்ட மாடு, கறவையாளர்கள் மூலமும் பாதிப்பு ஏற்படும். பாதிக்கப்பட்ட பசு மாட்டின் மூலம் கன்றுக்குட்டிகளுக்கும் பரவ வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்க மாவட்டத்தில் 60 ஆயிரம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகளில் ஈடுபட 53 கால்நடை மருந்தகஙகள், 3 கால்நடை மருத்துவமனைகளில் உள்ள கால்நடை டாக்டரகள், கால்நடை உதவி டாக்டர்கள், கால்நடை ஆய்வாளர்கள், பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட 47 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் மேற்குறிப்பிட்ட நாட்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை இலவசமாக வழங்க உள்ளனர். நான்கு வயதிற்கு மேல் உள்ள கன்றுகள், சினை இல்லாத மாடுகளுக்கு ஆண்டிற்கு ஒரு முறை இந்த தடுப்பூசி செலுத்த வேண்டும். உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், ஊராட்சித் தலைவர்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, கால்நடை பராமரிப்புத் துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ