அரசு மேல்நிலைப்பள்ளியில் காந்தி ஓவியக் கண்காட்சி
கூடலுார் : கேரளா வண்டிப்பெரியாறு அரசு மேல்நிலைப் பள்ளியில் காந்தி ஓவியக் கண்காட்சி நடந்தது. மகாத்மா காந்தியின் 156வது பிறந்த நாளை முன்னிட்டு குமுளி ஓவியர் அப்துல் ரசாக் வரைந்த காந்தி ஓவியங்கள் வண்டிப்பெரியாறு அரசு மேல்நிலைப் பள்ளியில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டன. தலைமை ஆசிரியர் ராஜ் துவக்கி வைத்தார். காந்தியின் சிறுவயது முதல் பல்வேறு காலகட்டங்களை நினைவு கூறும் வரையிலான 100 ஓவியங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியை ஏராளமான பள்ளி மாணவர்கள் கண்டு ரசித்தனர். ஓவியர் அப்துல் ரசாக்கை பள்ளி தலைமை ஆசிரியர் பாராட்டினார்.