உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆடு திருடர்கள் கைது

ஆடு திருடர்கள் கைது

கூடலுார், : கூடலுார் கர்ணம் பழனிவேல் பிள்ளை தெருவை சேர்ந்தவர் இஜாஜ் அகமது 30. இவர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே இறைச்சிக் கடை வைத்துள்ளார். இதற்காக வளர்த்து வரும் ஆடுகளை குப்பை கிடங்கு அருகே அமைத்துள்ள கொட்டத்தில் அடைத்து வைத்துள்ளார். இங்கு ஆடுகள் தொடர்ந்து திருடு போய் வந்தது.நேற்று முன்தினம் இரவு இவர் கண்காணித்த போது 4 பேர் கொட்டத்திற்குள் நுழைந்து ஆடுகளை திருடிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. உடனடியாக அவர்களைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் இவர்கள் காந்திகிராமத்தைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா 22, சிராஜுதீன் 25, லவா மர தெருவிஜய் 22, சூர்யா 24, என தெரியவந்தது. இவர்கள் கைது செய்யப்பட்டு ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை