மாநில பயிற்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு
தேனி: பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் மாநில அளவில் பிப்.,3 முதல் பிப்., 7 வரை சென்னையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக தேனி மாவட்டத்தை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள் 9 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கட்டுரை எழுதுதல் ஸ்ரீரங்காபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி அஸ்வினியா, கதை சொல்லுதல், பாடல் எழுதுதல் பிரிவில் பொன்மலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சர்ஷினிஹாஸ்ரீ, சச்சின், ,வினாடி வினா போட்டியில் மேலசொக்கநாதபுரம் விஷ்ணு,லோகேஸ்வரன்,ஜெயமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி அலெக்ஸ்பாண்டியன், கவுரிசங்கர், ஒளிப்பதிவு காமயகவுண்டன்பட்டி அரசுப்பள்ளி ஹனுமிதன், நடிப்பில் அழகாபுரி அரசுப்பள்ளி தசரதி ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.