விளையாட்டு போட்டிகளில் அரசுப்பள்ளி மாணவர்கள் வெற்றி
தேனி: மாவட்ட அளவில் நடந்த முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நி லைப்பள்ளி மாணவர்கள் கபடி, கால்பந்து போட்டியில் முதல் இரு இடங்களை வென்றனர். ஊழியர்களுக்கான போட்டியில் உடற்கல்வி ஆசிரியை தமிழ்மலர் கேரம் ஒற்றையர் பிரிவில் முதலிடம் வென்றார். மாவட்ட அளவில் நடந்த சைக்களில் போட்டி, நீச்சல் போட்டிகள் மாணவர்கள் முதலிடம், இரண்டாமிடம் வென்றனர். வென்ற மாணவர்கள், ஆசிரியர்களை தலைமை ஆசிரியை பாக்கியலட்சுமி பாராட்டினார். முதல்வர் கோப்பை போட்டியில் அரசு ஊழியர்கள் பிரிவில் கூட்டுறவுத்துறையில் பணிபுரியும் விற்பனையாளர் செஸ் போட்டியில் முதலிடம், எழுத்தாளர் கவியரசன் முதலிடம் வென்று வாலிபால் அணியில் இடம் பெற்றார். இருவரையும் கூட்டுறவு இணைப்பதிவாளர் நர்மதா வாழ்த்தினார்.