உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பள்ளி மாணவர்களுக்கான ஹேக்கத்தான் போட்டி

பள்ளி மாணவர்களுக்கான ஹேக்கத்தான் போட்டி

தேனி, ஆக. 22–தேனி நாடார் சரஸ்வதி பொறியில் கல்லுாரியில் பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்புகள், படைப்பாற்றலை மேம்படுத்தும் நோக்கில் 24 மணிநேர ஹேக்கத்தான் போட்டி நடந்தது. போட்டிகளை சி.இ.ஓ., முருகன் துவக்கி வைத்தார். தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் தர்மராஜன், துணைத்தலைவர் ஜீவகன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் ராமசந்திரன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் மதளைசுந்தரம் வரவேற்றார்.கல்லுாரி செயலாளர் சோமசுந்தரம், இணைச்செயலாளர் சுப்ரமணி, அமெரிக்காவின் ஒர்க்டே நிறுவன மூத்த பொறியாளர் செல்வகுமரன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போட்டியில் 177 மாணவர்கள் 45 அணிகளாக பிரிந்து கண்டுப்பிடுப்புகள், படைப்புகளை காட்சிபடுத்தினர். இதில் அரசுப்பள்ளிகளில் சேர்ந்த 77 மாணவர்கள் 19 அணிகளாக பங்கேற்றனர். பள்ளி மாணவர்களுக்கான ஹேக்கத்தான் போட்டி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !