கன மழை: வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்
தேவாரம் : தேவாரம் பகுதியில் பெய்த கன மழையால் பிரம்புவெட்டி மலை அடிவாரத்தில் துவங்கிய வெள்ள பெருக்கு நீரானது சந்தை தெருவில் உள்ள 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், பேரூராட்சி அலுவலம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது.கன மழையால் பிரம்புவெட்டி மலை அடிவாரத்தில் இருந்து வெள்ள நீர் வரத்து துவங்கியது. பேரூராட்சி அலுவலகம் முன் உள்ள பிரம்புவெட்டி ஓடையில் வெள்ள நீர் தடை இன்றி செல்ல முடியாத நிலையில் குறுகலாக பாலம் கட்டப்பட்டு உள்ளது. இதனால் சந்தை தெருவில் உள்ள 50 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. பேரூராட்சி அலுவலகம், உழவர் சந்தை, வி.ஏ.ஓ., அலுவலகம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அருகே உள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. வெள்ள நீரை கட்டுப்படுத்த முடியாத நிலையில் மக்கள் தவித்தனர். பெரிய ஓடையில் வந்த மழை நீரானது பெரிய தேவி கண்மாய் நிரம்பி வெளியேறியது. இதனால் அருகே உள்ள மெயின் ரோடு முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து சென்றது. பிள்ளாரூத்து ஓடையில் வெள்ள நீர் பெருக்கெடுத்து பிளாட்டுகளுக்குள் மழை நீர் புகுந்தது. பிரம்பு வெட்டி மழை அடிவாரத்தில் இருந்து அமராவதி நகர் வரை முறையாக துார்வாருவதோடு மழைநீர் சீராக செல்லும் வகையில் பேரூராட்சி அலுவலகம் எதிரே கட்டப்பட்டு உள்ள பாலத்தை அகலப்படுத்தவும், ஓடைகள், கண்மாய்களை துார்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.