மேலும் செய்திகள்
ராமகோபாலன் பிறந்தநாள்
20-Sep-2025
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் ஹிந்து முன்னணி சார்பில் நிறுவனர் ராமகோபாலன் பிறந்தநாள் விழா நடந்தது. பஸ் ஸ்டாண்ட் அருகே அவரது படத்திற்கு ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 98 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 98 இடங்களில் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிட்டு, போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தனர். கூடலுார்: பழைய பஸ் ஸ்டாண்டில் ஹிந்து முன்னணி நகர செயலாளர் ஜெகன் தலைமையில், கோட்ட பொறுப்பாளர் கணேசன் முன்னிலையில் நிறுவனர் ராமகோபாலன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.இதில் உருமி, தப்புத்தாளம், மேளம் வாசிக்கும் 50க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்களை பாராட்டப்பட்டனர். நினைவு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக தங்களது இசைக்கருவிகளை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாசித்தனர். இனிப்பு வழங்கப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
20-Sep-2025