போடியில் வீடு புகுந்து நகை திருட்டு
போடி: போடி அருகே துரைராஜ புரத்தில் வசிப்பவர் சுரேஷ்குமார் 27. நேற்று இவரது வீட்டிற்குள் பொட்டல்களத்தை சேர்ந்த 15வயது சிறுவர்கள் இருவர் நுழைந்து, பீரோவில் இருந்த ஒன்றரை பவுன் செயினை திருடி உள்ளனர். சுரேஷ்குமார் புகாரில் போடி தாலுகா போலீசார் சிறுவர்கள் இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.