உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அதிக மகசூல் தரும் நெல் நாற்றுகளை வளர்ப்பது எப்படி

அதிக மகசூல் தரும் நெல் நாற்றுகளை வளர்ப்பது எப்படி

கம்பம்,: ''அதிக மகசூல் தரும் நெல் நாற்றுகளை எவ்வாறு வளர்க்க வேண்டும்.'' என்பது குறித்து, வேளாண் துறை விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.இதுகுறித்து கம்பம் வேளாண்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கம்பம் பள்ளத்தாக்கில் முதல் போக சாகுபடிக்கு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. கம்பம் வட்டாரத்தில் தற்போது ஆயிரத்து 500 எக்டேரில் முதல் போக சாகுபடி செய்வதற்கு விவசாயிகள், நாற்றுகள் வளர்க்கும் பணியை துவக்க உள்ளனர். அதிக மகசூல் தரக்கூடிய ஆரோக்கியமான நாற்றுகளை வளர்க்க தண்ணீர் மேலாண்மை முக்கியமாகும். விதைத்து 18 முதல் 24 மணி நேரத்திற்குள் தண்ணீரை வடித்து விட வேண்டும். நீரை தேங்கவிடாமல், அதே சமயம் தேவையான நீரை 3 முதல் 5 நாட்கள் வரை பராமரித்து, 5 நாட்களுக்கு பின் 1.5 செ.மீ. அளவிலும், பின் நாற்றுகளின் வளர்ச்சிக்கு ஏற்றாற்போல் 2.5 செ.மீ., வரை நீரை பராமரிக்க வேண்டும். உர மேலாண்மை பொறுத்த வரை தழைச்சத்து பற்றாக்குறை இருந்தால், ஒரு சென்ட் பரப்பு நாற்றாங்காலுக்கு நாற்று பறிப்பதற்கு 7 முதல் 10 நாட்களுக்கு முன்னதாக 500 கிராம் யூரியாவை இடலாம். 10 நாட்களுக்குள் டி.ஏ.பி., உரம் இடுவதாக இருந்தால் யூரியா தேவையில்லை. இது தொடர்பாக சந்தேகங்கள் இருந்தால் கம்பம் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி