சமுதாயக்கூடம் திறப்பு விழா
தேனி: போடி சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 2023 --- 2024ல் கட்டப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகளான கொடுவிலார்பட்டி ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம், நாகலாபுரம் ஊராட்சியில் ரூ.21.50 லட்சம் செலவில் அரசு நடுநிலைப் பள்ளியில் 2 வகுப்பறை கட்டடங்கள், ஜங்கால்பட்டி ஊராட்சி லட்சுமிபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.10 லட்சம் செலவில் கலையரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டன. போடி புதுக்காலனியில் ரூ.14.50 லட்சம் மதிப்பில் ரேஷன் கடை, டி.வி.கே.கே., நகரில் மழை நீர் வடிகால் பாலம், வார்டு 15 ல் அங்கன்வாடி கட்டப்பட்டு உள்ளது. இதனை போடி முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். மாவட்டச் செயலாளர் சையதுகான், தேனி கிழக்கு ஒன்றியச் செயலாளர் முருகேசன், அவைத் தலைவர் ஈஸ்வரன், பொதுக்குழு உறுப்பினர் சுப்பு, தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவின் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.