உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தி.மு.க., எம்.எல்.ஏ.,விடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை

தி.மு.க., எம்.எல்.ஏ.,விடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை

தேனி:தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தி.மு.க., எம்.எல்.ஏ., மகாராஜன், அவரது தம்பி அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் லோகிராஜன் ஆகியோரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். இவர்களின் நிறுவனங்களில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை பறக்கும் படையினர் மாலை 4:00 மணியளவில் விசாரணை நடந்தினர். விசாரணை முடிவில் ஆவணங்கள் ஏதும் கைப்பற்றவில்லை. விசாரணை முடிந்து நேற்றிரவு 8:30 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர். முன்பு இருவரும் அரசு ஒப்பந்ததாரர்களாக இருந்தனர். இது குறித்து அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் லோகிராஜனிடம் கேட்ட போது எந்த சோதனையும் தங்களிடம் நடத்தவில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை