உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாவட்டத்தில் ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

மாவட்டத்தில் ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

தேனி: ஒரு ஓட்டுச்சாவடிக்கு 1200 வாக்காளர் என்ற எண்ணிக்கையில் ஓட்டுச்சாவடிகள் பிரிக்கப்பட உள்ளது. இதனால் மாவட்டத்தில் தற்போதுள்ள 1226 ஓட்டுச்சாவடிகளை விட கூடுதலாக 130 ஓட்டுச்சாவடிகளுக்கு மேல் அமைய வாய்ப்புள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அதற்காக ஆயத்த பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் துவக்கி உள்ளது. இதற்காக தொகுதி வாரியாக பி.எல்.ஓ.,க்கள் கண்காணிப் பாளர்களுக்கு டில்லியில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அடுத்ததாக பி.எல்.ஓ.,க் கள், அரசியல் கட்சியின் பி.எல்.ஏ.,க்களுக்கு புகைப்படத்துடன் கூடிய நவீன அடையாள அட்டை வழங்கும் பணி துவங்கி உள்ளது. தொகுதி வாரியாக வாக்காளர் பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வரும் நாட்களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட சோதனை நடத்த அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம்(தனி), போடி, கம்பம் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு கடந்த ஜன.,ல் வெளியிடப்பட்ட வாக்காளர்பட்டியலில் ஆண்கள் 5.56 லட்சம், பெண்கள் 5.82 லட்சம், மூன்றாம் பாலினத்தவர்கள் 205 பேர் என மொத்தம் 11.38 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் 563 ஓட்டுச்சாவடி அமைவிடங்களில் 1226 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இந்நிலையில் தேர்தல் ஆணையம் 1200 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி மையம் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.இதனால் மாவட்டத்தில் ஓட்டுச்சாவடிகள் அதிகரிக்கப்பட உள்ளது. இங்குள்ள 67 ஓட்டுச்சாவடிகளில் 1200 - 1300 வாக்காளர்கள், 60 ஓட்டுச்சாவடிகளில் 1400 பேர் வரையும், 34 ஓட்டுச்சாவடிகளில் 1500 பேர் வரையும், 5 ஓட்டுச்சாவடிகளில் 1500க்கும் மேற்பட்டோர் வாக்காளர்களான உள்ளனர். தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின் படி 166 ஓட்டுச்சாவடிகளில் 1200 வாக்காளர்களுக்கு மேல் உள்ளன. இதில் 1200 முதல் 1300 வரை உள்ள வாக்குச்சாவடிகளில் பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றால் இந்த பட்டியல் குறையலாம்.தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி மாவட்டத்தில் குறைந்த பட்சம் 130 ஓட்டுச்சாவடிகளுக்கு மேல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ