உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கூடலுார்: நீர் பிடிப்பில் பெய்த கனமழையால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1719 கன அடியாக அதிகரித்தது.சில நாட்களாக நீர்மட்டம் குறைந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 326 கன அடியாக இருந்த நீர்வரத்து வினாடிக்கு 1719 கன அடியாக அதிகரித்தது. இதனால் நீர்மட்டமும் சற்று உயர்ந்து 120.10 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). நீர் இருப்பு 2647 மில்லியன் கன அடியாகும்.கம்பம் பள்ளத்தாக்கில் அவ்வப்போது மழை பெய்து வருவதாலும் முதல் போக நெல் அறுவடை தீவிரமடைந்துள்ளதாலும் சாகுபடிக்கு தண்ணீர் தேவை குறைந்தது. இதனால் அணையில் இருந்து 833 கன அடியாக இருந்த நீர் திறப்பு நேற்று காலை 6 மணியிலிருந்து 456 கன அடியாக குறைக்கப்பட்டது. நேற்று மாலை மீண்டும் மழை பெய்ய துவங்கியது. இதனால் நீர்மட்டம் மேலும் உயரம் வாய்ப்புள்ளதுதமிழகப் பகுதிக்கு நீர் திறப்பு குறைக்கப்பட்டதால், தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் 74 மெகாவாட்டாக இருந்த மின் உற்பத்தி 41 மெகாவாட்டாக குறைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை