தனித்தேர்வர்கள் ஜன.,7 வரை விண்ணப்பிக்கலாம் 7 மையங்களில் ஏற்பாடு
தேனி: தேனி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் 7 மையங்களில் விண்ணப்பிக்கலாம் என தேர்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் 2026 மார்ச் ஏப்.,ல் 10ம் வகுப்பு, மேல்நிலை வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வுகள் நடக்கிறது. இதில் 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளில் தனித்தேர்வர்களாக எழுதுபவர்கள் 2026 ஜன., 7 வரை விண்ணப்பிக்கலாம். ஞாயிறு, அரசு விடுமுறை நாட்கள் தவிர பிற நாட்களில் பள்ளிகளில் செயல்படும் சேவை மையங்களில் காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை விண்ணப்பிக்கலாம். மாவட்டத்தில் கம்பம் ஆ.ரா., அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தேவாரம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரியகுளம் வி.நி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, போடி ஜா.கா.நி., மேல்நிலைப்பள்ளி ஆகியவை சேவைமையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பம் செய்வோர் ஆதார் நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2 எடுத்து வர வேண்டும். பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை பயிற்சி தனியாக வழங்கப்பட உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தல், மேலும் விவரங்களுக்கு சேவை மையங்களை தொடர்பு கொண்டு பயனடையுமாறு தேர்வுகள் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.