உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பேக்கிங் செய்த எண்ணெய்களை வாங்கி பயன்படுத்த அறிவுறுத்தல்

பேக்கிங் செய்த எண்ணெய்களை வாங்கி பயன்படுத்த அறிவுறுத்தல்

தேனி:பேக்கிங் செய்த எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துமாறும், பாத்திரங்களில் வைத்து விற்பனை செய்யப்படும் சமையல் எண்ணெய்கள் வாங்குவதை தவிர்க்குமாறு மாவட்ட உணவுப்பாதுகாப்பு நியமன அலுவலர் சசீதீபா தெரிவித்தள்ளார். அவர் கூறியதாவது: மாவட்டத்தில் எண்ணெய் விற்பனை செய்யும் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த எண்ணெய்களில் இருந்து 155மாதிரிகள் 10 மாதங்களில் எடுக்கப்பட்டன. அவற்றை ஆய்வு செய்ததில் கலப்படம் ஏதும் இல்லை என ஆய்வறிக்கை வந்துள்ளது. 10 எண்ணெய் மாதிரிகள் தரம் குறைந்து இருந்தது. தவறாக பெயரிடப்பட்டு விற்பனைக்கு வைத்திருந்தனர். கலப்பட எண்ணெய் விற்பனை செய்வது தெரிந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் பாத்திரங்களில் திறந்தவெளியில் வைத்து விற்பனை செய்யப்படும் எண்ணெய்கள் வாங்குவதை தவிர்க்கவும். பேக்கிங் செய்த எண்ணெய் வாங்கவும். அதில் உணவு பாதுகாப்பு உரிம எண், தயாரிப்பு, காலாவதி தேதி சரியாக உள்ளனவா என சரிபார்த்து வாங்கவும். தரமற்ற எண்ணெய், உணவுப்பொருட்கள் விற்பனை செய்வது தெரிந்தால் உணவுப்பாதுகாப்புத்துறையின் வாட்ஸ்அப் எண் 94440 42322 என்ற எண்ணில் புகார் அனுப்பலாம். அல்லது 04546 252549 என்ற மாவட்ட நியமன அலுவலர் அலுவலக தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை