உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாணவர்கள் தினமும் புத்தகம் வாசிப்பது கட்டாயம்; சட்டக்கல்வி இயக்குநர் பேச்சு

மாணவர்கள் தினமும் புத்தகம் வாசிப்பது கட்டாயம்; சட்டக்கல்வி இயக்குநர் பேச்சு

தேனி : ''மாணவர்கள் தினமும் புத்தகத்தின் ஒரு பக்கமாவது கட்டாயம் வாசிக்க வேண்டும்.'' என, தேனியில் நடந்த விழாவில் சட்டக்கல்வி இயக்குனர் விஜயலட்சுமி பேசினார். தேனி அரசு சட்டக் கல்லுாரியில் மாநில அளவிலான மாதிரி வழக்குவாதப் போட்டி நிறைவு விழா நடந்தது. சட்டக்கல்வி இயக்குநர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். அவர் பேசியதாவது: அனைவரிடமும் அன்பாய் இருக்க வேண்டும். ஒரு வார்த்தை ஒரிடத்தில் ஒரு பொருளும், மற்றொரு இடத்தில் வேறு பொருளும் அளிக்கும். எனவே இடம், பொருள் அறிந்து பேச கற்றுக்கொள்ள வேண்டும். மாணவர்கள் எந்த வாய்ப்பையும் தவற விடக்கூடாது. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். வாதங்கள் தயாரித்தல், திறமைகளை வளர்த்துக் கொள்ள மாதிரி நீதிமன்றங்கள் நடத்தப்படுகின்றன. படித்தால் தான் அதிகம் தெரிந்து கொள்ள இயலும். தினமும் புத்தகத்தின் ஒருபக்கமாவது கட்டாயம் வாசிக்க வேண்டும். அதேபோல் உழைத்தால் தான் உயர முடியும் என்றார். விழாவில் அரசு சட்டக் கல்லுாரி முதல்வர்கள் சண்முகப்பிரியா (தேனி), ஜெயகவுரி (புதுப்பாக்கம்), ராமபிரான் ரஞ்ஜீத்சிங் (திருநெல்வேலி), உத்தமபாளையம் சார்பு நீதிபதி சிவாஜி செல்லையா, வழக்கறிஞர்கள், மாதிரி நீதிமன்றக் குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். மாதிரி வழக்குவாதப் போட்டியில் சென்னை, தேனி, மதுரை, ஈரோடு, கோவை, ராமநாதபுரம், தர்மபுரி, திருநெல்வேலி உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்றன. இதில் கோவை அணி முதல் பரிசு வென்றது. தர்மபுரி அணி இரண்டாமிடம் வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ