உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அப்பாவை ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் திரையில் பார்த்தது சந்தோசமாக இருந்தது: மறைந்த நடிகர் விஜயகாந்த் மகன்கள் நெகிழ்ச்சி

அப்பாவை ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் திரையில் பார்த்தது சந்தோசமாக இருந்தது: மறைந்த நடிகர் விஜயகாந்த் மகன்கள் நெகிழ்ச்சி

தேனி: இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் கடந்த 5ந்தேதி வெளியாகி தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் (ஏ.ஐ.) மறைந்த நடிகரும் தே.மு.தி.க. நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் நடித்தது போன்ற காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இது விஜயகாந்த் ரசிகர்களுக்கும் நெகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்நிலையில், தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் உள்ள ஒரு தியேட்டரில் 'கோட்' திரைப்படம் பார்ப்பதற்காக விஜயகாந்தின் மகன்களான விஜயபிரபாகரன், சண்முகபாண்டியன் வந்தனர். அவர்கள் தியேட்டரில் படம் பார்த்தனர். தனது தந்தை வரும் காட்சியை நெகிழ்ச்சியுடன் பார்த்தனர். அவர்களுடன் சேர்ந்து நடிகர் சரத்குமார், இயக்குனர் பொன்ராம் ஆகியோரும் 'கோட்' படத்தை பார்த்து ரசித்தனர். படம் பார்த்த அனுபவம் குறித்து, விஜயபிரபாகரன், சண்முகபாண்டியன் ஆகிய இருவரும் நிருபர்களிடம் கூறும்போது, 'அப்பாவை ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் திரையில் பார்த்ததில் உண்மையிலேயே சந்தோஷமாக இருந்தது. படத்தில் விஜய் சிறப்பாக நடித்துள்ளார். விஜய் அண்ணா எங்கள் குடும்பத்தில் ஒருவர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ