உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விடுமுறை நாட்களிலும் பணி பத்திரப்பதிவு அலுவலர்கள் குமுறல்

விடுமுறை நாட்களிலும் பணி பத்திரப்பதிவு அலுவலர்கள் குமுறல்

தேனி:'வருவாயை அதிகரிக்க விடுமுறை நாட்களிலும் பத்திரப்பதிவு அலுவலகம் இயங்கவலியுறுத்துவதால் மன அழுத்தத்தில் தவிக்கிறோம்,'என சார்பதிவாளர்கள், அலுவலர்கள் குமுறுகின்றனர்.மாநிலத்தில் 11 மண்டல பத்திரப்பதிவு அலுவலகங்கள் உள்ளன. இதன் கீழ் 50 மாவட்ட பதிவாளர் அலுவலகங்கள், 571 சார்பதிவாளர்கள் அலுவலகங்கள் இயங்குகின்றன. அரசின் வருவாயை அதிகரிக்க அரசு விடுமுறை நாட்களிலும் பதிவுத்துறை இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பதிவுத்துறை அலுவலர்கள் கூறுகையில், 'பதிவுத்துறையில் வாரத்தில் 6 நாட்கள் பணியாற்றுவது 2024 ஜனவரி முதல் கட்டாயமாக்கப்பட்டுவிட்டது. விரைவில் ஞாயிறு அன்றும் பதிவுத்துறை இயங்கும் என அறிவிப்புவர உள்ளது. அரசு விடுமுறை, பண்டிகை தினம் என்றால் 'சிறப்பு பதிவு நாள்' என கூடுதல் கட்டணமாக ரூ.ஆயிரம் பெறுகிறோம். இதன் மூலம் அரசுக்கு அந்த ஒருநாளில் மட்டும் ரூ.45.60 லட்சம் கூடுதலாக கிடைக்கிறது. ஆனால் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை எதுவும் வழங்கப்படுவதில்லை. பணியாற்றும் நாளுக்கு மாற்று விடுப்பு மட்டுமே வழங்குகின்றனர். இதனால் குடும்பத்தினருடன் இருக்க முடியாமல் தவிக்கிறோம். இதை தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்கக் கோரி, சங்க கூட்டமைப்பின் மூலம் தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை