உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  கண்மாயில் சடலம்

 கண்மாயில் சடலம்

தேனி: தேனி அருகே பூலைக்குண்டு கண்மாயில் சடலம் கிடப்பதாக வி.ஏ.ஓ., அன்னபூரணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாருடன் சம்பவ இடத்திற்கு சென்ற போது தலை, கால்கள் இன்றி முழுவதும் சிதைக்கப்பட்ட உடல் கிடந்தது. உடலில் இருப்பு கருப்பு கோட், வெள்ளை நிற கால்சட்டை இருந்தது. உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வி.ஏ.ஓ., புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !