உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  கோயில்களில் கார்த்திகை மாத நிறைவு பூஜை

 கோயில்களில் கார்த்திகை மாத நிறைவு பூஜை

தேனி: தேனி நகரம் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் நேற்று கார்த்திகை மாத நிறைவு பூஜைகள் நடந்தன. தேனி பெத்தாட்சி விநாயகர் கோயில் கார்த்திகை மாதத்திற்கு கடைசி சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேக பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் பெற்று சென்றனர். பெரியகுளம்: ஷீரடி சாய்பாபா கோயில், பாலசுப்பிரமணியர் கோயில், பாம்பாற்று ராம பக்த ஆஞ்சநேயர் கோயில், லட்சுமிபுரம் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் உள்ளிட்ட கோயில்களில் கார்த்திகை மாத இறுதி சோமவார பூஜையும், கார்த்திகை மாத நிறைவு பூஜைகளும் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் பெற்றுச் சென்றனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ