உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேக விழா

பெரியகுளம்: பெரியகுளம் முருகமலை நகர் ஈச்சமலை ரோடு பகுதியில் மும்மூத்தி கோயில் கும்பாபிஷேகம் விழா நடந்தது. ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள், எஜமான் ஸ்ரீ பாண்டி முனிஸ்வரர் ஆகியோர் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றினர். முன்னதாக யாகசாலை பூஜை நடந்தது. மீனாட்சி சுந்தரேஸ்வரர், லட்சுமி நாராயணன், சரஸ்வதி பிரம்மதேவர் கோயில் விமானங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை முருகமலை நகர் ஊர்ப்பொதுமக்கள், மும்மூர்த்தி அறக்கட்டளை திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ