முன்களப் பணியாளர்களுக்கு உரிமையியல் பயிற்சி
தேனி:கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமையியல் திட்ட முன்கள பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் துவங்கியது.இப்பயிற்சிக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் காமாட்சி தலைமை வகித்தார். மாநில திட்ட அலுவலர்கள் அரவிந்த், ராஜராஜன், சவுந்தராஜன் முன்னிலை வகித்தனர். மாவட்ட திட்ட அலுவலர் வீரவேல், திட்டத்தை இணைந்து செயல்படுத்தும் தனியார் அறக்கட்டளை நிர்வாகி ராமசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பயிற்சி பற்றி அலுவலர்கள் கூறுகையில், மாவட்டத்தில் 8 ஊரகம், 5 நகர்பகுதி என 13 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. முன்கள பணியாளர்கள் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான சர்வே பணி மேற்கொள்ள உள்ளனர். அரசுத்துறைகள் வழங்கும் திட்டங்களில் அவர்களை பயனாளிகளாக வீட்டில் இருந்தே விண்ணப்பிப்பது. உபகரணங்கள் உள்ளிட்டவை கிடைப்பதை உறுதி செய்வது முன்கள பணியாளர்களின் பணியாகும். இதற்காக அலைபேசி செயலி தயாராகி வருகிறது. இதன் பயன்பாடுகள் பற்றி பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி வகுப்பு நாளை வரை நடக்கிறது என்றனர்.