உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஓட்டல், விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

ஓட்டல், விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

மூணாறு: மூணாறில் ஓட்டல், தங்கும் விடுதி ஆகியவற்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த டில்லியைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.மூணாறில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் வெடி குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், 24 மணி நேரத்தில் வெடித்து சிதறும் என மூணாறு போலீஸ் ஸ்டேஷனுக்கு ஏப்.30ல் இணைய தளம் வாயிலாக மிரட்டல் வந்தது.இடுக்கியைச் சேர்ந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவினரின் உதவியுடன் போலீசார் அனைத்து ஓட்டல், தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் சோதனை நடத்தியதில் வெறும் புரளி என தெரியவந்தது. மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீசார் விசாரித்தனர். அவர் புதுடில்லியில் பட்டயநகரைச் சேர்ந்த நிதின்கர்மா 30, என தெரிய வந்தது. மூணாறு டி.எஸ்.பி. அலெக்ஸ்பேபி, எஸ்.ஐ. அனில்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் நிதின்கர்மாவை கைது செய்தனர்.ஓட்டல் நிர்வாகம் படித்துள்ள நிதின் கர்மா வெடி குண்டு மிரட்டல் விடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். சமீபத்தில் இது போன்ற வழக்கில் சிக்கி மைசூர் சிறையில் இருந்தார். இவர் மீது கேரளாவில் வெடி குண்டு மிரட்டல் விடுத்ததாக நான்கு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ