உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 23 பவுன்  நகை திருடியவர் கைது

23 பவுன்  நகை திருடியவர் கைது

தேனி : தேனி அருகே பழனிசெட்டிபட்டி வியாபாரி கண்ணன் வீட்டில் கதவை திறந்து 23 பவுன் தங்க நகையை திருடி சென்ற நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பண்ணாரி அம்மன் கோயில் தெரு சுந்தர்ராஜ் என்ற தனுஷ்கோடி 29, குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.பழனிசெட்டிபட்டி சவுடேஸ்வரி நகர் கண்ணன் 55. இவர் தேனி சுப்பன் செட்டி தெருவில் மின்மோட்டார் விற்பனை செய்கிறார். இவரது மனைவி சங்கீதா, ஜன.3ல் மாலையில் வீட்டின் அருகே உள்ள கோயிலுக்கு சென்றார். மர்மநபர் வீட்டின் கதவை திறந்து பீரோவில் இருந்த ரூ.6.63 லட்சம் மதிப்பிலான 23 பவுன் தங்கநகைகள், வெள்ளி கொலுசுகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததனர். வீடியோ பதிவு ஆதாரங்களை வைத்து சப்டிவிஷன் குற்றப்பிரிவு போலீஸ் சிறப்பு எஸ்.ஐ. நாகராஜன் தலைமையிலான போலீசார், நாமக்கலில் இருந்த தனுஷ்கோடியை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ