மணல் திருடிய ஒருவர் கைது
தேனி: கண்டமனுார் பழைய ராமசந்திராபுரம் ஆற்றில் நேற்று முன்தினம் மணல் திருட்டு நடந்தது. தகவல் அறிந்த கண்டமனுார் போலீசார் சென்ற போது டிராக்டரை விட்டுவிட்டு தப்பி ஓடினர். டிராக்டரை பறிமுதல் செய்து அதன் உரிமையாளர் பற்றி விசாரிக்கின்றனர். இதேபோல் கடமலைக்குண்டில் ஊத்து ஓடையில் மணல் திருடிய விருமான்டி கடமலைக்குண்டு போலீசார்கைது செய்து அவரிடம் இருந்து டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.