உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீசாரை மிரட்டியவர் கைது

போலீசாரை மிரட்டியவர் கைது

போடி; போடி அருகே முத்தையன் செட்டிபட்டியை சேர்ந்தவர் மதன் 35. இவர் புதிதாக கட்டியுள்ள சுகாதார வளாகத்தை மூடி விட்டதாக, அதே பகுதியை சேர்ந்த அருண் என்பவர் சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்து உள்ளார்.இது சம்பந்தமாக போடி தாலுகா போலீசார் விக்ரமன், சிறப்பு எஸ்.ஐ., காளிமுத்து விசாரிக்க சென்றுள்ளனர். மதன் போலீசாரை தகாத வார்த்தையால் பேசி, டூவீலர் சாவியை பறித்து, பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். போலீஸ்காரர் விக்ரமன் புகாரில் போடி தாலுகா போலீசார் மதனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை